சுமார் 600 மாணவிகள் திரைப்படத்தை பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் சுமார் ரூ.15 ஆயிரம் வசூலாகி உள்ளது. இதேபள்ளி வளாகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் மற்றொரு பள்ளியில் ரஜினி நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதற்காக நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.10 வசூலிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது மாணவிகளின் பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் வெளியில் கசிந்த நிலையில், சிலர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அந்த பள்ளியில் தொலைபேசி மூலம் விசாரணை நடத்தி, மாணவிகளிடம் வசூலித்த 25 ரூபாயை திருப்பி கொடுக்குமாறு உத்தரவிட்டார். அதேபள்ளி வளாகத்தில் செயல்படும் மற்றொரு பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ராணி நேரடியாக சென்று விசாரணை நடத்தி, மாணவர்களிடம் பணத்தை திரும்ப வழங்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார்.
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ‘மாணவிகளின் மன அழுத்தத்தை குறைக்கவே திரைப்படம் ஒளிபரப்பப்பட்து. கல்வி அதிகாரிகள் கூறியபடி பணம் திரும்ப வழங்கப்படும்’ என தெரிவித்தனர். இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவிகளிடம் தலா ரூ.50 வசூலித்து ஒரு திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
The post மாணவிகளிடம் பணம் வசூல் செய்துநெல்லை பள்ளிகளில் திரைப்படங்கள் ஒளிபரப்பு: மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை, பணத்தை திரும்ப வழங்க உத்தரவு appeared first on Dinakaran.