- Gandharvakottai
- கந்தவக்கோட்டை
- கல்வி
- எழுத்தறிவு திட்டம்
- கந்தவக்கோட்டை ஒன்றியம்
- கந்தர்வகோட்டை
- யூனியன்
- புதுக்கோட்டை மாவட்டம்
- கந்தர்வ…
கந்தவகோட்டை, நவ.12: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு மையங்களை மாவட்ட கல்வி தொடக்க கல்வி அலுவலர் பார்வையிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டம் நடைபெற்றது. கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பெண்கள் கற்போர்கள் 964 பேரும், ஆண்கள் கற்போர்கள் எண்ணிக்கை 201 என மொத்தம் 1065 கற்போர்களுக்கு 66 மையங்களில் எழுத்தறிவு திட்ட தேர்வு நடைபெற்றது.
இத் தேர்வினை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) செந்தில் அக்கச்சிப்பட்டி, இந்திரா நகர், குமரன் காலனி, காட்டுநாவல், மெய்க்குடிபட்டி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்யில் கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) பாரதிதாசன் உடனிருந்தார். புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் என்பது 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டமாகும்.
இத்திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு, வங்கிகளில் பணம் எடுத்தல், அடிப்படை சட்டங்கள் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இத்தேர்வினை தேர்வு மைய கண்காணிப்பாளராக தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் செயல்பட்டனர். புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தேர்வினை தேர்வர்கள் ஆர்வமுடன் எழுதினர்.
The post கந்தர்வக்கோட்டையில் 66 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்டதேர்வு appeared first on Dinakaran.