இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவும், நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழாவும் டிசம்பர் 26ம் தேதி துவங்குகிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்று பட வேண்டும் என்பதை நூற்றாண்டு விழாவில் வலியுறுத்துவோம்.
கோவை ஈஷா மையத்தில் யோகா பயிற்சி கற்றுத்தருவதாக கூறி வசதி படைத்த இளம்பெண்கள் அழைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுகிறது. அவர்களுக்கு மொட்டை அடிப்பது உள்ளிட்ட சித்ரவதைகள் நடைபெறுகிறது. ஈஷா மையத்தில் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் தெரியவில்லை. பல்வேறு பெண்கள் சீரழிக்கப்பட்டதாக ஊடகங்கள் வழியாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அந்த மையத்தில் தங்கியுள்ளனர். ஒன்றிய அரசு, ஜக்கி வாசுதேவுக்கு பத்ம பூசன் விருது வழங்கியுள்ளது. தனிக்காட்டு ராஜாவாக அவர் செயல்பட்டு வருகிறார். முக்கியமாக, ஈஷா மையம் மீது நடவடிக்கை எடுக்கவும், ஜக்கி வாசுதேவை விசாரணைக்கு உட்படுத்தவும் வலியுறுத்தி கோவையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. திருவனந்தபுரம் விமான நிலையம் அதானிக்கு விற்கப்பட்டதால் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். தமிழக மீனவர் பிரச்னைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காணாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் ஒன்றிய அரசு தான் பொறுப்பு. கூட்டணி தொடர்பாக பாஜவுக்கும், எடப்பாடி பழனிசாமி துண்டு போட்டு வைத்துள்ளார். எடப்பாடி கருத்தை தமிழிசை வரவேற்று இருப்பதன் மூலம் அவர்கள் ஒத்த கருத்தில் இருப்பது தெரிகிறது. பாசிச பாஜ தமிழகத்தில் காலூன்ற கூடாது என்பதற்கான அரசியல் நடவடிக்கை என்னவோ அதை ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். அதை தொடர்ந்து தீவிரப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post கூட்டணிக்காக பாஜவுக்கும் துண்டு போடும் எடப்பாடி: முத்தரசன் கடும் தாக்கு appeared first on Dinakaran.