வெளியுறவுச்செயலர் பதவி காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக் காலத்தை வரும் 2026ம் ஆண்டு ஜூலை 14 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி கடந்த ஜூலை 15ம் தேதி பொறுப்பேற்றார். 1989 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான அவரது பதவிக்காலம் நவ.30ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அவருக்கு மீண்டும் 2026 ஜூலை 14 வரை பணி நீட்டித்து ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

The post வெளியுறவுச்செயலர் பதவி காலம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: