சென்னை: சென்னை தியாகராயர் நகரில் சுரேஷ் ஜெயின் என்பவரது நகைக் கடையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின்போது பணியில் சேர்ந்த ரேவதி என்பவர் நகைகளை திருடியதாக சுரேஷ் ஜெயின் புகார் தெரிவித்தார். போலி நகைகளை வைத்துவிட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை ரேவதி திருடிச் சென்றதாக புகார் அளித்தார் . நகைக் கடையில் பணிக்கு சேர்ந்தபோது ரேவதி அளித்த ஆவணங்களும் போலியானவை என விசாரணையில் அம்பலமானது. நகைக் கடை உரிமையாளர் சுரேஷ் ஜெயின் அளித்த புகாரை அடுத்து மாம்பலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நகை கடையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு..!! appeared first on Dinakaran.