×

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வரலட்சுமி விரதம்: விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்ட பெண் பக்தர்கள்

பிரான்சில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் வரலக்ஷிமி விரதம் மற்றும் அதை முன்னிட்டு விளக்கு பூஜை ஆகஸ்ட் மாதம் 10ம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலை அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு குத்துவிளக்கை அம்மனாக அலங்கரிக்கப்பட்டு உலகை காத்து ரட்சிக்கும் மஹாவிஷ்ணுவின் மனைவி மகாலட்சுமியின் அவதாரத்தில் அஷ்ட லஷ்மிகளில் ஒன்றான வரலஷ்மியை ஆவாகனம் செய்யப்பட்டு கும்பம் வைத்து பக்தர்களில் பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் வரலஷ்மி விரதமிருந்து விளக்கு பூஜை செய்தார்கள். இதன் தத்துவத்தையும் அதற்கு கிடைக்கும் பலன்களை தியாகராஜ குருக்கள் மிக அழகாக சுருக்கமாக விளக்கினார். பக்தர்கள் அனைவரும் மனமுருகி வேண்டிக்கொண்டார்கள். யாவருக்கும் அம்மனின் அபிஷேக குங்குமம் மற்றும் பிரசாதங்கள், மஞ்சள்கயிறு வழங்கப்பட்டது.வந்த பக்தர்களையவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Tags :
× RELATED கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா