வேதாரண்யம், நவ.11: சம்பா சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரம் பூச்சி மருந்து வழங்க வேண்டும் என்று வேதாரண்யம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாய சங்க நிர்வாகி வீரப்பன் தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலகுரு முன்னிலை வகித்தார்.
கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், துணைச் செயலாளர் பாஸ்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பாபுஜி, மாவட்ட செயலாளர் சரபோஜி , பொருளாளர் நாராயணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன், மாதர் சம்மேளனம் மாவட்டச் செயலாளர் மேகலா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் கடந்த ஆண்டு பருவத்துக்கான சம்பா நெல் பயிர் காப்பீடு திட்டத்தில் பாகுபாடில்லாமல் அனைத்து கிராம விவசாயிகளும் பயனடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் , சம்பா சாகுபடிக்கு தட்டுபாடு இல்லாமல் உரம், பூச்சி மருந்து வழங்க வேண்டும். உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 16ம் தேதி தியாகிகள் தினத்தையொட்டி தகட்டூரில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
The post சம்பா சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரம் பூச்சி மருந்து வழங்க வேண்டும் appeared first on Dinakaran.