வடகிழக்கு பருவமழை எதிரொலி

விருதுநகர், நவ. 11: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழைகாரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைகள், கண்மாய்களில் நீர்நிரம்பி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்டது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்துள்ள நிலையில் மாவட்டத்தில் குழந்தைகள், முதியவர்கள் என ஏராளமானோருக்கு காய்ச்சல் மற்றும் சளித் தொல்லை ஏற்பட்டுள்ளது.

சளித் தொல்லை காரணமாக இருமல், தலைவலி ஆகியவற்றால் பெரும்பாலானோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதன்காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post வடகிழக்கு பருவமழை எதிரொலி appeared first on Dinakaran.

Related Stories: