பள்ளி மாணவ, மாணவிகளின் படிப்பில் கவன சிதறலை தவிர்க்க செல்போன் தடுப்பு நடவடிக்கை

தேனி: பள்ளிக்கு செல்போன் கொண்டு வருவதை தடுத்தல் மற்றும் மாணவ,மாணவிகளிடம் செல்போன் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்த காலம் போய் ஆசிரியர்களை மாணவர்கள் தண்டிக்கும் காலமாக மாறி உள்ளது. படிப்பில் கவனம் செலுத்த கூறி ஆசிரியர்கள் கண்டித்தால் கூட பெரும் பிரச்னையாகி விடுகிறது. இதற்கு பெற்றோர்களும் துணை போகின்றனர். கொரோனா உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலையால் மாணவர்களின் கல்வி திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மாணவர்களிடம் கல்வி திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் செல்போன் வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அவைகளை புத்தக பைகள், சாப்பாட்டு பை உள்ளிட்டவைகளில் மறைத்து வைத்து இடைவேளை நேரங்களில் ஆசிரியர்களுக்கு தெரியாமல் பயன்படுத்துகின்றனர். பள்ளி விட்டு செல்லும் போது முழுமையாக செல்போன்களை பயன்படுத்திக் கொண்டே வீடுகளுக்கு செல்கின்றனர். மாணவ, மாணவிகள் செல்போன்களை பள்ளிகளுக்கு கொண்டு வராமல் இருக்க பெற்றோர்களின் ஒத்துழைப்பு வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பள்ளி மாணவ, மாணவிகளின் படிப்பில் கவன சிதறலை தவிர்க்க செல்போன் தடுப்பு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: