குறுவை நெல் அறுவடை பணி தீவிரம்

தஞ்சாவூர், நவ. 10: தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்று, குறுவை நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. தஞ்சாவூரை அடுத்த சாலியமங்கலம் பகுதியில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம்நெல் சாகுபடி நடை பெறுவது வழ க்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருந்ததால் சற்று தாமதமாக திறந்து விடப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரி க்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறை ந்து சம்பா, தாளடி சாகு படி பரப்பளவு அதிகரிக்கும். மின் மோட்டார் வைத்து ள்ள விவசாயிகள் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பே முன் குறுவை நடவு பணிகளை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் குறுவை நெல் சாகுபடி சுமார் 1.50 லட்சம் ஏக்கர் வரை நடைபெற்றது. இதில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயந்திரங்கள் மூலம் இந்த அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல்களும் இயந்திரம் மூலம் கட்டப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், குறுவை சாகுபடிக்கான அறுவடை பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். தற்போது மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளது. இந்த பகுதிகள் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்கு இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாது. அதனால் அவற்றை ஆட்களை வைத்து தான் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த நெல்கள் அனைத்தும் ஈரப்பதமாக உள்ளது. தற்போது பனி மற்றும் மழை பெய்வதால் நெல்லை காய வைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. 17% ஈரப்பதம் இருந்தால் தான் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியும். ஈரப்பதம் அதிகம் இருப்பதால் அதனை சாலையில் போட்டு காய வைத்து வருகிறோம். எனவே ஈரப்பதத்தை தளர்த்தி அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

The post குறுவை நெல் அறுவடை பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: