ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கால்நடை மருந்தகங்களில் இலவச தடுப்பூசி

பெரம்பலூர்,நவ.10: பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இலவச தடுப்பூசி நாளை 11ம்தேதி முதல் வருகிற 30ம்தேதி வரை இலவசமாக கால்நடை மருந்தகங்களில் செலுத்தி பயன்பெறலாம் என்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
ஆட்டுக்கொல்லி நோய் என்பது, ஆடு வளர்ப்போருக்கு அதிக அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோய் ஆகும். இந்நோய் Morbillivirus எனப்படும் வகையைச் சேர்ந்த ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் தொற்று நோயாகும்.எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த நோயிலிருந்து கால் நடைகளைக் காத்திடும் பொருட்டு 04 மாதத்திற்கு மேல் வயதுடைய கருவுறா வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு இந்தத் தடுப்பூசியினை நாளை 11ஆம்தேதி திங்கட் கிழமை முதல் வருகிற 30 ஆம்தேதி சனிக்கிழமை முடிய இலவசமாக கால் நடை மருந்தகங்களில் செலுத்தி பயன்பெறலாம். அதிகக் காய்ச்சல் (41 C) 3 முதல் 5 நாட்கள் நீடிக்கும், சோர்வு,தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்து சளி வடிந்து உறைந்து இருத்தல், கண்களில் பூளை தள்ளுதல், வாயின் உட்புறங்கள் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீர் சுரத்தல், கழிச்சல், இருமல், குட்டிகளில் அதிக அளவில் இறப்பு போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.

ஆட்டுக் கொல்லி நோய்த் தொற்றிலிருந்து தங்களது வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளைக் காத்திடும் பொருட்டு, தங்களது கிராமத்திற்கு கால்நடை மருத்துவக் குழுவினர் தடுப்பூசி போட வரும்பொழுது, தங்களது ஆடுகளுக்கு அடையாள வில்லை அணிவித்தும், அடையாளங்களை வழங்கி, குடும்ப அட்டை மருத்துவ குழுவினரிடம் வழங்கியும், ஆடுவளர்க்கும் விவசாயிகள் உரிய விபரம் அளித்து 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கால்நடை மருந்தகங்களில் இலவச தடுப்பூசி appeared first on Dinakaran.

Related Stories: