தர்மபுரி, நவ.10: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி பி.பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(48). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 6ம் தேதி ஆடுகளுக்கு இலை தழை பறித்து வருவதாக, வீட்டில் இருந்தவர்களிடம் கூறிச்சென்றுள்ளார். பின்னர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர், தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்குள்ள தேக்கு மரத்தின் அருகே படுகாயங்களுடன் செல்வம் கிடந்தார். அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி பொம்மிடி போலீசார் விசாரித்ததில், மரக்கிளைகளை வெட்டியபோது செல்வம் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.