×

28 வயதில் ரூ.60 வழிப்பறி 55 வயதில் கைது

மதுரை: மதுரை, தெப்பக்குளம் காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவருக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த 1997ல் ரூ.60ஐ வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாகவே இருந்ததால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில், சிவகாசியில் குடும்பத்துடன் வசித்து வந்த பன்னீர்செல்வத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை மதுரை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 27 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைதானது பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 28 வயதில் ரூ.60 வழிப்பறி 55 வயதில் கைது appeared first on Dinakaran.

Tags :
× RELATED கன்னியாகுமரியில் துணிகரம்: ஆசிரியை...