×

மனைவி, மகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தொழிலாளி

கரூர்: கரூர் மாவட்டம் வெங்கமேடு விவிஜி காலனியில் வசிப்பவர் செல்வகணேஷ்(40). இவரது மனைவி கல்பனா(33). இவர்களது மகள் சாரதிபாலா(6), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தாள். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகணேஷ் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து மனைவி மற்றும் மகளை சரமாரி வெட்டினார். இதில் இருவரும் அந்த இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து செல்வகேணஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மனைவி, மகளை கொன்றுவிட்டு விஷம் குடித்த தொழிலாளி appeared first on Dinakaran.

Tags :
× RELATED மனவளர்ச்சி குன்றிய மாணவியிடம்...