×

சிங்கப்பூரின் 200ம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி

சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு பஞ்சமில்லாத சிங்கை தேசத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட பூப்பந்து போட்டிகள் இனிதே நிறைவுற்றது, ராஃபில்ஸ் அவர்களின் வருகையின் 200 வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் இந்த விளையாட்டு போட்டியினை அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர், இப்போட்டியில் அனைத்து இனத்தவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பல இனக்குழுக்கள் ஒருங்கிணைத்து சமத்துவத்துடன் வாழும் சிங்கப்பூரின் வாழ்வியல் முறையை இவ்விளையாட்டுப்போட்டிகள் பறைசாற்றும் விதமாகவே அமைந்தது, ஒற்றுமைக்கு உவமையாக அமைந்த இவ்விளையாட்டுப்போட்டியின் சிறப்பு விருந்தினராக திரு.மு. அ. மசூது , தமிழர் பேரவையின் துணைத்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார், பல தேசத்திலிருந்து வந்து சிங்கையில் பணிபுரிபவர்களும் பெருமளவில் கலந்துகொண்டு விளையாட்டுப்போட்டிக்கு வலிமை சேர்த்தனர்,“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” உடல் வலிமையையும், மண வலிமையையும் மேம்படுத்துவதில் விளையாட்டுப்போட்டிக இன்றியமையாதது, நமது ஆரோக்கியமான வாழ்விற்கு முக்கியத்துவமான விளையாட்டுப்போட்டிகளை சிங்கப்பூரில் ஏற்பாடு செய்து திறன்பட நடத்தி முடித்ததில் அண்ணாமலைப்பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்கத்தினரின் பங்களிப்பு மிகவும் சிறப்புமிக்கதாகும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடிய வெற்றியாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் திரு ஒ. மாணிக்கவாசகம் , வர்த்தகர் மற்றும் வளர் தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

முதல் பரிசை வென்றவர்கள் திருவாளர்கள் டான் டீன் ராய் மற்றும் வில்லி தேஹ், இரண்டாம் பரிசு வென்றவர்கள் திருவாளர்கள் எரிக் கோஹ் டாங் லோன் மற்றும் தானாவின், மூன்றாம் பரிசை வென்றவர்கள் திருவாளர்கள் எங் ஜியா ஜுன் மற்றும் ஷான், நான்காம் பரிசை வென்றவர்கள் திருவாளர்கள் ஜாரடியன் தியோ வெய் ஷெங் மற்றும் ச்வா யீஉ பின். மேலும் விருவிருப்புக்கு குறையில்லாமல் அமைந்த இந்த விளையாட்டு போட்டிகள் பார்வையாளர்களுக்கும், விளையாட்டு பிரியர்களுக்கும் விருந்தாகவே அமைந்தது, விளையாட்டு போட்டிகளை மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் அமைத்து ஏற்பாடு செய்த குழுவினரின் பணி பாராட்டுதலுக்குரியது, இதுபோன்று சமூக ஒற்றுமை சார்ந்த பணிகளை திறன்பட செயல்படுத்துவதில் அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகவே அமைந்து வருகிறது

Tags :
× RELATED கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா