×

நெமிலி அருகே நள்ளிரவு துணிகரம் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி: போலீசாரை கண்டதும் ‘எஸ்கேப்’

நெமிலி: நெமிலி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது போலீசார் ரோந்து சென்றதால் தப்பியோடிவிட்டனர். இதனால் மதுபானம் தப்பியது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் இருந்து பனப்பாக்கம் செல்லும் சாலையில் விவசாய நிலத்தையொட்டி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் நேற்று விற்பனையை முடித்து விட்டு விற்பனையாளர் கடையை பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். இந்நிலையில் நள்ளிரவில் நெமிலி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை நின்றிருந்த சிலர், போலீசாரை கண்டதும் தப்பிேயாடிவிட்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், டாஸ்மாக் கடை அருகே சென்று பார்த்தனர்.

அங்கு கடை அருகே பொருத்தப்பட்டிருந்த கேமரா வளைத்து திருப்பி வைக்கப்பட்டிருந்து. அங்கிருந்த மின்விளக்கு உடைக்கப்பட்டிருந்தது. வெளிப்புற இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் மர்ம ஆசாமிகள் டாஸ்மாக் கடையில் திருடுவதற்காக வந்து கேமராவை திருப்பி மின்விளக்கை உடைத்து இரும்பு கேட்டின் பூட்டு உடைத்து திருட முயன்றுள்ளனர். அப்போது, போலீசார் ரோந்து வந்ததால் தப்பியோடிவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

The post நெமிலி அருகே நள்ளிரவு துணிகரம் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி: போலீசாரை கண்டதும் ‘எஸ்கேப்’ appeared first on Dinakaran.

Tags : Midnight Venture Tasmak store ,Nemili ,Tasmak ,Agricultural Land Grader Tasmak Shop ,Banapakam ,Ranipettai District ,Midnight Venture Tasmak ,store ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் பில் நடைமுறைக்கு...