மைக்ரோசாப்ட்-உடன் ஒப்பந்தம்: 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக் பயிற்சி

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு தொழில் நுட்ப அறிவு அவசியம் என்பதை கருத்தில் கொண்டு 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளிக்க மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை வருங்காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை, மைக்ரோ சாப்ட், டிசால்ட் சிஸ்டம் ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்து ெகாண்டுள்ளன.

அதன்படி அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு ரோபோட்டிக், கோடிங் மற்றும் புராடக்ட் டெவெலப்மெண்ட் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 100 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 38 ஆயிரம் மாணவ மாணவியருக்கு மைக்ரோசாப்ட் மூலம் TEALS திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் இந்த திட்டம் மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

The post மைக்ரோசாப்ட்-உடன் ஒப்பந்தம்: 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: