×

கல்வி நிறுவனங்களில் போதைபொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க அரசாணை வெளியீடு

சென்னை: மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்களில் போதைபொருள் எதிர்ப்பு மன்றங்கள் (Anti -Drug Club) மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வெளியான அறிக்கையில்; தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக காவல்துறையினர். தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விநியோகத்தைக்கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவினர் ஏற்பாட்டில் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கடந்த 11082022 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மாநில அளவில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “போதையில்லா தமிழ்நாடு” என்ற அறைகூவல் விடுத்தார். இதையொட்டி போதையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய போதைப்பொருளின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து, தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழ்நாடு அரசு ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் போதைப்பொருள் எதிர்ப்பு குழு மற்றும் தன்னார்வலர்கள் அணி தொடங்க வலியுறுத்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது, தொடங்கப்பட்ட இந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்களை ஒழுங்குபடுத்தவும் ஊக்குவிக்கவும் தற்போது தமிழ்நாடு அரசானது பிரத்யேக அரசாணை (G.O (Ms) No. 52, dated: 14.10.2024 Home, Prohibition & Excise (XIV) Department] வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை நிலை நிறுத்துவதற்கும், மாணவர்களை இந்த முயற்சியில் பங்குதாரர்களாக ஈடுபடுத்துவதற்கும். இரண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன:

i NSS/NCC/RRC/YRC தன்னார்வலர்கள் (Volunteers) 30 மணி நேர தன்னார்வத்திட்டம்

ii. Anti Drug Club அனைத்து கல்வி நிறுவனங்கள்.

இந்த அரசாணையின் படி ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் Anti Drug Club (போதை பொருள் எதிர்ப்பு குழு) மற்றும் VolunteeringTeam (தன்னார்வலர்கள் அணி) என்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதனுடைய நடவடிக்கைகளை கண்காணிக்கவும் மற்றும் சிறப்பாக செயல்படவும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அதிகாரி (CEO), மண்டல இணை இயக்குனர் (உயர்கல்வி துறை) மாவட்ட நாட்டு நலப்பணி பொறுப்பு அதிகாரி District Nodal NSS Programmee இணை இயக்குனர் (சுகாதார துறை) ஆகியோர்களை உறுபினர்களாக கொண்டும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (EBCID) உறுப்பினர் செயலராகவும் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் கூடுதல் காவல் துறை இயக்குனர் (EBCID ஆணையர் (உயர்கல்வி துறை ஆணையர் (பள்ளி கல்வி துறை). துறை இயக்குனர் (NCC) மற்றும் உறுப்பினர் செயலாளர் (MMU) ஆகியோர்களை கொண்டும் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவானது காலாண்டு மற்றும் அரையாண்டு அளவில் மேற்படி AntiDrug Club மற்றும் Volunteering team அமைப்புகளின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து அவற்றில் மேற்படி கால அளவில் மூன்று சிறந்த பள்ளி கல்லூரி/ பாலிடெக்னிக் தேர்தெடுக்கப்பட்டு அந்த கல்வியாண்டில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட Anti Drug Club மற்றும் Volunteering Team சார்ந்த பள்ளி/ கல்லூரி/ பாலிடெக்னிக் தேர்ந்தப்பட்டு அவற்றிக்கு தனிதனியாக முதல் பரிசாக ரூ.15,000 2வது பரிசாக ரூபாய்.10,000/- மற்றும் 3 வது பரிசாக ரூபாய் 5,000/-ம் வழங்கப்படும்.

இவ்வாறு மாவட்ட அளவில் தேர்ந்தேடுக்கப்பட்ட பள்ளி/ கல்லூரி/ பாலிடெக்னிக் மாநில குழுக்கு அனுப்பபட்டு மாநில குழுவானது அவற்றில் மாநில அளவில் சிறந்த பள்ளி/ கல்லூரி பாலிடெக்னிக் முதல் மூன்று கல்வி நிறுவனங்கள் அறிவிக்கப்படும். மாநில அளவில் முதல் பரிசு ரூபாய். 1 லட்சம். 2 வது பரிவு ரூபாய். 75,000/- மற்றும் 3 வது பரிசு ரூபாய்.50,000/- வழங்குவதன் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு மூலம் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் போதை இல்லா தமிழ்
நாடு என்ற இலக்கை அடைய முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தன்னார்வத் திட்டங்களின் நோக்கம் NSS/NCC/RRC/YRC.

* மிகபெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
* NCC மற்றும் NSS தன்னார்வலர்களை தொடர்ந்து ஈடுபடுத்துதல்.
* போதைப்பொருளுக்கு எதிரான தொடர் மற்றும் நிலையான பிரச்சாரத்தை உறுதிசெய்தல்.
* போதை பொருளுக்கு எதிரான பிரச்சாரம் மாணவர்களை நேரடியாக சேர்த்து அதன் மூலம் மறைமுகமாக முழு சமூகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
* போதைப்பொருளுக்கு எதிராக ஒரு தன்னார்வப் படையை உருவாக்குதல்.
* அவற்றை வருடம் முழுவதும் மற்றும் தொடரந்து நடைமுறை படுத்துதல்.
* ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தல் மூலமாக பிரச்சாரத்திற்கு மேலும் வலு சேர்த்தல்.

போதைப்பொருள்எதிர்ப்புகுழுவின் (Anti Drug Club)தோக்கம்

* போதை பொருள்கள் பயன்பாடு என்பது நெறிமுறைகளின் படியும். தார்மீக அடிப்படையிலும் மற்றும் சட்டரீதியாகவும் தவறானது என தெரிந்தும் மாணவ சமுதாயத்திலும் மற்றும் இளைஞர்களிடத்திலும் அது பற்றி அவர்களிடம் எந்த ஒரு எதிர்வினை கருத்தும் இல்லாத நிலையில், மாணவ சமுதாயத்தில் போதை பொருள்களின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல் வேண்டும்.
* மாணவர்களை பங்குதாரர்களாக ஈடுபடுத்துவதன் மூலம் அதிகரித்து வரும் போதைப்பழக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பதும். மாணவர்கள் தங்களுடைய வளாகத்தை போதைப்பொருள் இல்லாததாக இருப்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பை உருவாக்குவதன் மூலம், அவர்கள் தங்கள் பள்ளி மற்றும் சுற்றியுள்ள சமூகத்தின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார்கள்.
* இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கும் மாணவர்கள் உணர்வுபுர்வமாக பங்குபெற்ற திருப்தியை அடைவார்கள்.
போதைபொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு மூலம் கல்வி நிறுவனங்கள் தங்களை போதைப்பொருள் இல்லாததாக அறிவிக்க ஊக்குவிக்க வேண்டும்.
* மாணவர்களின் பெற்றோர்களிடையே நம்பிக்கை உணர்வை உருவாக்குங்கள்.
* ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான அடுத்த தலைமுறை

தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு காவல்துறையும் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு போதையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய முன் வருமாறு வேண்டுகோள் விடுவிக்கப்படுகிறது.

வேண்டும். ஏனேனில் இன்றைய இளைஞர்கள், தங்கள் ஆற்றல்களுக்கு வேறு எந்த வழியுமின்றி தன்னம்பிக்கை குறைவால், சாதராணமாக தோன்றுவதால், மன உளைச்சல் காரணமாகவும், தன்னை பிடிக்காமல் போகும் வாய்ப்பு உள்ளதென்று உணர்வதால், போதைபொருள் உபயோகத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்.

The post கல்வி நிறுவனங்களில் போதைபொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu Police ,
× RELATED வன உயிரினங்களை பாதுகாக்க நிதி...