×
Saravana Stores

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் இதுவரை ரூ.453 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் இதுவரை ரூ.453 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களில் இருந்து தொழில்முனைவோர்களை உருவாக்கிடும் திராவிட மாடலின் புரட்சித் திட்டம்! இதுவரையில்,

* பயனாளிகள் – 1988
* கடன் – ரூ.453 கோடி
* மானியம் – ரூ.230 கோடி

தினத்தந்தியின் இந்தத் தலையங்கம் நமது பணிகளுக்கான ஊக்கம் என்றாலும்; இதன் நோக்கம் தேவையுள்ள மக்களுக்கு முழுதாகச் சென்றடைய, விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் அனைவரும் இதனைப் பயன்படுத்திக்கொண்டு உயரவேண்டும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் இதுவரை ரூ.453 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Annal Ambedkar Career Pioneers Scheme ,Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,Annal Ambedkar Industry Pioneers Scheme ,Adiravidar ,Dinakaran ,
× RELATED சென்னை உள்பட தமிழ்நாட்டில் மழை நீர்...