×

அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமனம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமனம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும்; புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக, கழகத்தின் சார்பில் ‘கள ஆய்வுக் குழு’ கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.

கே.பி. முனுசாமி, கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

திண்டுக்கல் C.சீனிவாசன், கழகப் பொருளாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

நத்தம் இரா. விசுவநாதன், கழக துணைப் பொதுச் செயலாளர்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

பி. தங்கமணி, கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

S.P. வேலுமணி, கழக தலைமை நிலையச் செயலாளர்
கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

D. ஜெயக்குமார் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

C.Ve. சண்முகம்,கழக அமைப்புச் செயலாளர்
விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

செ. செம்மலை, கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

பா. வளர்மதி, கழக மகளிர் அணிச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்

வரகூர் அ. அருணாசலம், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

மேற்கண்ட குழுவினர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு வருகை தரும் கள ஆய்வுக் குழுவினர், அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். கழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை, முழு கவனத்துடன் செய்திடுமாறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமனம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Secretary General ,Edappadi Palanisamy ,Adimuka Field Survey Committee ,Chennai ,Edappadi Palanisami ,Anna ,General ,Eadapadi Palanisami ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கள ஆய்வு குழு இன்று ஆலோசனை