×
Saravana Stores

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் தொடரும் கொடூர தாக்குதல்கள் : விளக்கம் அளிக்காத 5 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டெல்லி : பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் கும்பல் வன்முறை நடைபெறுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்காத 5 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட மாநிலங்கள் சிலவற்றில் மாட்டு இறைச்சி உண்பவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பசு பாதுகாவலர்களால் சிறு பான்மையினர் பாதிக்கப்படுவதை தடுக்க குற்றவாளிகளை அடையாளம் கண்டு மாநில அரசுகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் அதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கியது.

எனினும் மராட்டியம், அசாம், சட்டிஸ்கர், பீகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும் இதனை தடுக்க உத்தரவிடக் கோரியும் இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 5 மாநிலங்களும் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்மந்தப்பட்ட மாநிலங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அடுத்த விசாரணைக்கு முன்பு 5 மாநிலங்களும் கண்டிப்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தவறினால் அவற்றின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரித்து வழக்கின் விசாரணையை 4 வார காலங்களுக்கு ஒத்திவைத்தனர்.

The post பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் தொடரும் கொடூர தாக்குதல்கள் : விளக்கம் அளிக்காத 5 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு...