×
Saravana Stores

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் அதிகளவில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகார், குஜராத், டெல்லி உள்ளிட்ட -மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். கசிந்த வினாத்தாள் பெரிய அளவில் மாணவர்களை சென்றடையவில்லை என்பதால் மறுதேர்வு தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காஜல் குமாரி என்பவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

The post இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : SUPREME COURT ,Delhi ,Bihar ,Gujarat ,Dinakaran ,
× RELATED ஜாமீன் மனு நிராகரிக்கும் போது விசாரணை...