×

சில்லி பாயின்ட்…

* இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் 2வது டெஸ்ட் (4 நாள் போட்டி) மெல்போர்னில் இன்று காலை 5.00 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இப்போட்டியில் கே.எல்.ராகுல் களமிறங்குகிறார்.
* நியூசிலாந்துடன் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டர் சமிந்து விக்ரமசிங்கே இரண்டு தொடருக்குமான அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். டி20 போட்டிகள் தம்புல்லாவில் நவ. 9, 10 தேதிகளிலும் ஒருநாள் போட்டிகள் பல்லெகெலேவில் நவ. 13, 17, 19 தேதிகளிலும் நடக்க உள்ளன.

* பிக்பாஷ் டி20 தொடரில் களமிறங்கும் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* ஜம்மு & காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் மேகாலயா 73 ரன்னுக்கு சுருண்டது. ஜம்மு & காஷ்மீர் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்துள்ளது.
* பீகார் அணியுடன் பாட்னாவில் நடக்கும் ரஞ்சி போட்டியில் (சி பிரிவு) ம.பி அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 381 ரன் குவித்துள்ளது. கேப்டன் ஷுபம் ஷர்மா 134, வெங்கடேஷ் அய்யர் 118 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags :
× RELATED இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி...