×

ஷங்கர் 76, சித்தார்த் 94; தமிழ்நாடு 299/7

கவுகாத்தி: அசாம் அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்துள்ளது. பரசபாரா கிரிக்கெட் அரங்கில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற அசாம் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. தொடக்க வீரர்கள் சுரேஷ் லோகேஷ்வர் 8 ரன், நாராயண் ஜெகதீசன் 5 ரன்னில் வெளியேற, தமிழக அணி 13 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. விஜய் ஷங்கர் – பிரதோஷ் ரஞ்சன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்தனர். பிரதோஷ் 27 ரன் எடுத்து ராஜ்போங்ஷி பந்துவீச்சில் அவுட்டானார்.

அடுத்து விஜய் ஷங்கர் – ஆந்த்ரே சித்தார்த் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தனர். விஜய் 76 ரன் (131 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), ஷாருக் கான் 28 ரன்னில் பெவிலியன் திரும்ப, சித்தார்த் 94 ரன் (163 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் சாய் கிஷோர் 3 ரன்னில் வெளியேற, தமிழ்நாடு முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்துள்ளது.
முகமது அலி 27 ரன், சோனு யாதவ் 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post ஷங்கர் 76, சித்தார்த் 94; தமிழ்நாடு 299/7 appeared first on Dinakaran.

Tags :
× RELATED இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி...