கனகம்மாசத்திரம் அருகே பைக்-அரசு பஸ் மோதல்: வாலிபர் பரிதாப சாவு

திருத்தணி:கனகம்மாசத்திரம் அருகே இன்று அதிகாலை பைக் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் பிரதீப் (28). இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அவரது சித்தப்பா சகாதேவ் என்பவரின் வீட்டுக்கு சென்று விட்டு இன்று அதிகாலை சென்னைக்கு பைக்கில் திரும்பினார். கனகம்மாசத்திரம் அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கூளூர் பகுதியில் சென்றபோது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த தடம் எண் 97 அரசு பஸ் பைக் மீது வேகமாக மோதியது.

இதில் பிரதீப் தூக்கி வீசப்பட்டு ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவலறிந்து கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பஸ் டிரைவர் அம்மையார்குப்பத்தை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டுக்கு சென்று வீடு திரும்பி சென்றபோது பஸ் மோதி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

The post கனகம்மாசத்திரம் அருகே பைக்-அரசு பஸ் மோதல்: வாலிபர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Related Stories: