×

மத்திய பிரதேசம் கோல் மழை

அகில இந்திய ஆண்கள் ஹாக்கி 14வது தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்பட 31 அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. இந்த சுற்று நவ.11 வரை நடைபெறும். நவ.13ல் காலிறுதி ஆட்டங்களும், நவ.15ல் அரையிறுதி மற்றும் நவ.16ல் பைனல் நடக்க உள்ளது. முதல் ஆட்டத்தில் உத்திரபிரதேசம் 6-0 என்ற கோல் கணக்கில் கேரளாவையும் (எப் பிரிவு), கர்நாடகா 10-0 என உத்தரகாண்டையும் (டி பிரிவு), சண்டிகர் 5-0 என திரிபுராவையும் வென்றன. தொடர்ந்து நடைபெற்ற எச் பிரிவு ஆட்டத்தில் மணிப்பூர் 19-2 என்ற கோல் கணக்கில் பீகாரை வீழ்த்தியது. சி பிரிவில் மத்திய பிரதேசம் 29-0 என்ற கோல் கணக்கில் அந்தமான் நிக்கோபார் தீவுகளை போட்டுத் தாக்கியது. கடைசியாக நடந்த சி பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாடு 7-0 என்ற கோல் கணக்கில் ஆந்திர பிரதேசத்தை வென்றது. மத்திய பிரதேசம் – அந்தமான் நிகோபார் அணிகளிடையே நடந்த போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

The post மத்திய பிரதேசம் கோல் மழை appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Kol ,All ,India Men ,Hockey ,Chennai ,Tamil ,Nadu ,Puducherry ,Karnataka ,Andhra ,Pradesh ,Kerala ,Maharashtra ,Madhya ,Pradesh Gol Rain ,
× RELATED மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் பள்ளி முதல்வரை மாணவன் சுட்டுக் கொலை