மும்பை: இந்திய பங்குச்சந்தையில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ6 லட்சம் கோடி இழந்தனர். இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 79,713 புள்ளிகளில் துவங்கியது. அதிகபட்சமாக 78,233 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 942 புள்ளிகள் சரிந்து 78,782 ஆக இருந்தது. இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 309 புள்ளிகள் சரிந்து 23,995 ஆனது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வங்கி பங்குகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை விலக்கியது,
மேலும், அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கி இந்த வார இறுதியில் வட்டி விகிதம் குறித்த முடிவை எடுக்க உள்ளதால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதிக்குப் பிறகு இது அதிகபட்ச சரிவாக இருந்தது. அன்றைய தினம் சென்செக்ஸ் 1,491 புள்ளிகள் அல்லது 1.87 சதவீதம் சரிந்து 78,233 ஆக இருந்தது.நேற்றைய சரிவால் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு ரூ5,99,539.5 கோடி சரிந்து ரூ4,42,11,068 கோடியாக இருந்தது. ஒரே நாளில் ரூ6 லட்சம் கோடியை இழந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
The post இந்திய பங்குச்சந்தை சரிவு; முதலீட்டாளர்களுக்கு ரூ6 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.