×

2024 வாகன விற்பனையில் வெள்ளை நிற கார்கள் ஆதிக்கம்: ஜடோ டைனமிக்ஸ் நிறுவன புள்ளி விவரத்தில் தகவல்

டெல்லி: 2024ஆம் ஆண்டு நாடு முழுவதும் விற்பனையான கார்களில் வெள்ளை நிற கார்களே மிக அதிகமாக விற்பனையாகி உள்ளது. இருப்பினும் கருப்பு மற்றும் நீல நிற கார்களை விரும்புவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. ஜடோ டைனமிக்ஸ் நிறுவனத்தின் தரவுகளின் படி கடந்த 4 ஆண்டுகளாவே இந்திய வாடிக்கையாளர்கள் வெள்ளை நிற கார்களையே அதிகம் விரும்பி வாங்குவது உறுதியாகி இருக்கிறது. இருப்பினும் கருப்பு மற்றும் நீலநிற கார்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஜடோ டைனமிக்ஸ் கூறியுள்ளது.

2024ல் கார்கள் வாங்கியவர்களில் 39.3 சதவீத பேர் வெள்ளை நிற கார்களை தேர்வு செய்துள்ளனர். இது கடந்த 4 ஆண்டுகளில் 4 விழுக்காடு குறைவு தான் என்ற போதும் 2024ல் வெள்ளைநிற கார்களை தேர்வு செய்தவர்களே அதிகம். அதே காலகட்டத்தில் கருப்பு வண்ண கார்களை தேர்வு செய்தவர்களின் விழுக்காடு 14.8லிருந்து 20.2 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 2021ல் நீல நிற கார்களை விரும்பி வாங்கியவர்கள் வீதம் 8.8 ஆக இருந்த நிலையில் 2024ல் அது 10.9 ஆக அதிகரித்துள்ளது.

2024ல் அடர் சாம்பல் நிறத்தினாலான கார்களை 14.1 விழுக்காடு மக்களும் வெள்ளி நிறத்திலான கார்களை 6.7 சதவீதத்தினரும் விரும்பி வாங்கி இருப்பதாக ஜடோ டைனமிக்ஸ் நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதிக வெப்பத்தை கிரகிக்கும் தன்மை உள்ளபோதும் தூசு, சிறிய கீறல்களை மறைப்பதில் அடர்வண்ண கார்கள் சிறந்தவை என்று வாடிக்கையாளர்களின் மனப்போக்கே கருப்பு மற்றும் நீல வண்ண கார்கள் விற்பனை அதிகரிக்க காரணம் ஏன் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

The post 2024 வாகன விற்பனையில் வெள்ளை நிற கார்கள் ஆதிக்கம்: ஜடோ டைனமிக்ஸ் நிறுவன புள்ளி விவரத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Jado ,Delhi ,Jado Dynamics ,Dinakaran ,
× RELATED பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே...