×

இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1%க்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

மும்பை: புத்தாண்டின் 2-வது நாளிலேயே இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1%க்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,029 புள்ளிகள் உயர்ந்து 79,537 புள்ளிகளில் வர்த்தகம். பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு 7%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு 5%, மாருதி சுசூகி பங்கு 4.5% விலை உயர்ந்து வர்த்தகமாகிறது. மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்கு 4%, இன்ஃபோசிஸ் பங்கு 3%, டைட்டன் பங்கு 2% விலை உயர்ந்துள்ளது.

 

The post இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1%க்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி! appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,INDEX ,Mumbai Stock ,Sensex ,Bajaj Finserv ,Bajaj ,Dinakaran ,
× RELATED ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட...