×

புத்தாண்டின் 2-வது வர்த்தக நாளில் பங்குச் சந்தை குறியீட்டு எண் சுமார் 2% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மும்பை: புத்தாண்டின் 2-வது வர்த்தக நாளில் பங்குச் சந்தை குறியீட்டு எண் சுமார் 2% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,436 புள்ளிகள் அதிகரித்து 79,944 புள்ளிகளானது. வர்த்தகம் நிறைவடைவதற்கு சற்று முன்பு 1,525 புள்ளிகள் உயர்ந்து 80,033 புள்ளிகளைத் தொட்டு இறங்கியது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 29 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 446 புள்ளிகள் உயர்ந்து 24,189 புள்ளிகளானது. வர்த்தக நேரம் முடிவதற்கு முன் நிஃப்டி 484 புள்ளிகள் உயர்ந்து 24,226 புள்ளிகளைத் தொட்டு இறங்கியது.

The post புத்தாண்டின் 2-வது வர்த்தக நாளில் பங்குச் சந்தை குறியீட்டு எண் சுமார் 2% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Bombay Stock ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்1000 புள்ளிகள் சரிவு..!!