×

நியூசிலாந்திடம் 3-0 என ஒயிட்வாஷ்; இந்திய அணிக்கு சுய பரிசோதனை தேவை: சச்சின், யுவராஜ் அறிவுறுத்தல்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 3-0 என இந்தியா இழந்து வரலாற்றில் முதன்முறையாக ஒயிட்வாஷ் ஆனதால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சொந்த மண்ணில் அடைந்த மோசமான தோல்வியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தள பதிவில், “இந்திய அணி சொந்த மண்ணில் 3-0 என டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்திருப்பது விழுங்குவதற்கு மிகவும் கடினமான மாத்திரை ஆகும். மேலும் இந்த தோல்வி நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள அழைக்கிறது.

நாம் தோல்வி அடைந்ததற்கான காரணம் தயாரிப்பு இன்மையா? மோசமான ஷாட் தேர்வா? அல்லது சரியான மேட்ச் பயிற்சி இல்லாததா? கில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியிருந்தார். ரிஷப் பன்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடினார்” என தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் கூறுகையில், “டி20 உலகக் கோப்பையை வென்ற அடுத்த சில மாதங்களில், சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆகி இருக்கிறது. இதுதான் இந்த விளையாட்டின் அழகு. ஆஸ்திரேலிய தொடரில் பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன. இந்திய அணி சுய பரிசோதனை செய்து முன்னேறி செல்ல வேண்டும். இதுதான் சிறந்த வழி” என்று கூறியிருக்கிறார்.

The post நியூசிலாந்திடம் 3-0 என ஒயிட்வாஷ்; இந்திய அணிக்கு சுய பரிசோதனை தேவை: சச்சின், யுவராஜ் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Whitewash ,Zealand ,Sachin ,Yuvraj ,Mumbai ,India ,New Zealand ,Sachin Tendulkar ,Dinakaran ,
× RELATED இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய...