×

உ.பி. முதல்வருக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது

மும்பை: மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு மர்ம எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது. அதில், “இன்னும் 10 நாள்களுக்குள் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பாபா சித்திக்கை போல் அவர் கொலை செய்யப்படுவார்” என மிரட்டல் செய்தி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாத்திமாகான்(24)கைது செய்யப்பட்டுள்ளார். ஐடி படித்துள்ள அந்த பெண் சிறிது மனநலம் சரியில்லாதவர்” என்று போலீசார் தெரிவித்தனர்.

The post உ.பி. முதல்வருக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது appeared first on Dinakaran.

Tags : UP ,Mumbai ,WhatsApp ,Mumbai Traffic Police ,Uttar Pradesh ,Chief Minister ,Yogi Adityanath ,Baba Siddiqui ,U.P. Woman ,Dinakaran ,
× RELATED புரோ கபடி உபி யோதாஸ் வெற்றி