×

7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா ஏ வெற்றி

மெக்கே: இந்தியா ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), ஆஸ்திரேலியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கிரேட் பேரியர் ரீஃப் அரங்கில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 107 ரன், 195 ரன்னுக்கு சுருண்டன. 88 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா ஏ அணி 312 ரன் குவித்து ஆல் அவுட்டானது (சாய் சுதர்சன் 103, தேவ்தத் படிக்கல் 88, இஷான் கிஷன் 32). இதைத் தொடர்ந்து, 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குய ஆஸ்திரேலியா ஏ அணி, 3,ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி 47 ரன், பியூ வெப்ஸ்டர் 19 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா ஏ 75 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து வென்றது. மெக்ஸ்வீனி 88 ரன், வெப்ஸ்டர் 61 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. ஏ 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் மெல்போர்னில் நவ.7ல் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியா – இந்தியா ஏ மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் பெர்த் ‘வாகா’ மைதானத்தில் (நவ.15-17) நடைபெறும்.

The post 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா ஏ வெற்றி appeared first on Dinakaran.

Tags : Australia A ,McKay ,India A ,Great Barrier Reef ,India ,Dinakaran ,
× RELATED ஆஸி. ஏ அணி அபார பந்து வீச்சில் 161 ரன்னில் சுருண்டது இந்தியா ஏ