ஜம்மு – காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு: 2 பேர் மருத்துவமனையில் அட்மிட்

ஜம்மு: உத்தரபிரதேச மாநிலம் ஷஹாரன்பூரை சேர்ந்த சுபியான், உஸ்மான் மாலிக் ஆகிய இருவரும், புட்காம் மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதிர்ஷ்டவசமாக இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் படுகாயத்துடன் உயிர் தப்பினர். தற்போது அவர்கள் நகரில் உள்ள ஜேவிசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 12 நாட்களுக்கு முன்பு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஒரு மருத்துவர் மற்றும் 6 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் கங்கனீரில் இருந்து சோனாமார்க் வரையிலான பகுதியில் சுரங்கப்பாதையில் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றதாக ஒன்றிய அரசு தொடர்ந்து கூறி வரும் நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

The post ஜம்மு – காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு: 2 பேர் மருத்துவமனையில் அட்மிட் appeared first on Dinakaran.

Related Stories: