சபரிமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று முன்தினம் சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான சித்திரை திருநாள் பாலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலையில் ஆண்டுதோறும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மன்னரின் இந்த வருட பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 30ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்திருந்தனர். தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் லட்சார்ச்சனை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் மண்டலகால பூஜைகளுக்காக வரும் 15ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.

The post சபரிமலை கோயிலில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: