விடிய, விடிய மழை: கோவையில் குளம் உடைப்பு

பெ.நா.பாளையம்: கோவை அருகே விடியவிடிய பெய்த மழையால் குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் சோமையம்பாளையம் ஊராட்சி உள்ளது. கணுவாய் அருகே உள்ள இந்த ஊராட்சியில் 5 குளங்கள் உள்ளது. குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களில் பெய்த மழையால் அனைத்து குளங்களும் தண்ணீரால் நிரம்பி உள்ளது. ஊராட்சியின் 3-வது வார்டு கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் உள்ள குளத்தின் கரையில் லேசான உடைப்பு ஏற்பட்டது.

அந்த பகுதியில் உள்ள மரம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு விழுந்துவிட்டது. அதன் வேர்பகுதி மட்டும் அதே இடத்தில் இருந்தது. மழையால் ஏற்பட்ட மண்அரிப்பு அந்த வேருடன் சேர்த்து கரையின் சிறு பகுதியும் அடித்து சென்றது. தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் ரங்கராஜன், வட்டார வளர்ச்சி அதிகாரி ராமமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி மூலம் மண்திட்டு அமைத்து உடைப்பை சரி செய்து வருகின்றனர்.

 

The post விடிய, விடிய மழை: கோவையில் குளம் உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: