×

ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் விடுவிப்பு: 45 வீரர்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்; அதிகபட்சமாக ரூ.110.5 கோடியுடன் ஏலத்தில் இறங்கும் பஞ்சாப்

மும்பை: 18வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு முன் ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்தது. தக்க வைக்கும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க நேற்றுடன் காலக்கெடு முடிந்தது.

* சன்ரைசர்ஸ் ஐதராபாத்: ஹென்ரிச் கிளாசென் (ரூ.23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் சர்மா (ரூ.14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி), நிதிஷ்குமார் ரெட்டி (ரூ.6 கோடி),

* மும்பை இண்டியன்ஸ்: ஜஸ்பிரித் பும்ரா (ரூ.18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), ரோஹித் சர்மா (ரூ.16.30 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி) ஆகியோரை தக்க வைத்துள்ளது.

* லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி) மயங்க் யாதவ் (ரூ.11 கோடி), மொஹ்சின் கான் (ரூ.4 கோடி), ஆயுஷ் படோனி (ரூ.4 கோடி),

* பஞ்சாப் கிங்ஸ்: ஷஷாங்க் சிங் (ரூ.5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ.4 கோடி),

* ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (ரூ.18 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.18 கோடி), ரியான் பராக் (ரூ.14 கோடி), துருவ் ஜுரெல் (ரூ.14 கோடி), ஷிம்ரோன் ஹெட்மியர் (ரூ.11 கோடி), சந்தீப் சர்மா (ரூ.4 கோடி),

* சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), மதீஷா பத்திரனா (ரூ.13 கோடி), சிவம் துபே (ரூ.12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), டோனி (ரூ.4 கோடி),

* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோஹ்லி (ரூ.21 கோடி), ரஜத் படிதார் (ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ.5 கோடி)

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரிங்குசிங் (ரூ.13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 கோடி), சுனில் நரைன் (ரூ.12 கோடி), ஆண்ட்ரே ரசல் (ரூ.12 கோடி), ஹர்ஷித் ராணா (ரூ.4 கோடி), ராமந்தீப் சிங் (ரூ.4 கோடி),

* டெல்லி கேபிடல்ஸ்: அக்சர் படேல் (ரூ.16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் போரல் (ரூ.4 கோடி),

* குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான் (ரூ.18 கோடி), ஷுப்மான் கில் (ரூ.16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ.8.50 கோடி), ராகுல் தெவாட்டியா (ரூ.4 கோடி), ஷாருக்கான் (ரூ.4 கோடி) ஆகியோரை தக்க வைத்துள்ளது.

மொத்த ஏலத்தொகை 120 கோடியில் தக்கவைத்துள்ள வீரர்களுக்கான தொகையை கழித்து மீதமுள்ள தொகையில் அணிகள் ஏலத்தில் பங்கேற்கும். அந்த வகையில் சிஎஸ்கே ரூ.55, டெல்லி ரூ.73, குஜராத் ரூ.69, கேகேஆர் ரூ.51, லக்னோ ரூ.69, மும்பை ரூ.45, பஞ்சாப் ரூ.110.5, ராஜஸ்தான் ரூ.41, பெங்களூரு ரூ.83, சன்ரைசர்ஸ் ரூ.45 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கும்.

கடந்த சீசனில் கேகேஆருக்காக கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ், டெல்லி கேப்டனாக செயல்பட்ட ரிஷப்பன்ட், லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோரும் விடுவிக்கப்பட்டு ஏலத்திற்கு வந்துள்ளனர். மும்பை கேப்டனாக அடுத்த சீசனிலும் ஹர்திக் பாண்டியாவே செயல்படுவார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

The post ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் விடுவிப்பு: 45 வீரர்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்; அதிகபட்சமாக ரூ.110.5 கோடியுடன் ஏலத்தில் இறங்கும் பஞ்சாப் appeared first on Dinakaran.

Tags : Rishup Bunt ,K. L. Rahul ,Shreyas ,IPL ,Punjab ,Mumbai ,Rishap Bunt ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல்...