தீபாவளி பண்டிகையானது நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்து ஏராளமான பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல்ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது.
பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு, வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக் கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது, என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது
மேலும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
The post சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 347 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.