அதுமட்டுமின்றி 5 லட்சம் வரை மட்டுமே இலவசமாக சிகிச்சை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அதிக மருத்துவ செலவு ஏற்படும் என்பதால் அதனை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும் மூத்த குடிமக்கள், பெண்கள் அதிக அளவில் கிராமப்புறத்தில் வசித்து வருவதால் அதுகுறித்தும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை தவிர, ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
The post ஒன்றிய அரசு மூத்த குடிமக்களுக்கு வழங்கும் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கடிதம் appeared first on Dinakaran.