×

வித்தியாச அமைப்பில் தமிழக உணவகம் துபாயில் திறப்பு

துபாய்  : துபாய் கராமா பகுதி தமிழகத்தில் புகழ்பெற்ற ஆம்பூர் பாரம்பரிய ருசியுடன் கூடிய பிரியாணி கடையான ஆம்பூர் ஸ்டார்  பிரியாணி கடை திறக்கப்பட்டது.ரயில் நிலையம்,அடுப்பில் சட்டி வடிவமைப்பில் கல்லா என வித்தியாச வடிவமைப்பில் கடை அமைக்கப்பட்டுளது.


தமிழகத்திலிருந்து நடிகர் சரத்குமார்,கேப்டன் டீவி மேலாண்மை இயக்குநரும் தேமுதிக நிர்வாகியுமான சுதீஷ் ,நடிகர் சதீஷ்,இயக்குநரும் நடிகருமான பஞ்சு ,பழனிபாபு ,ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின்,அடையாறு ஆனந்தபவன் மேலாண்மை இயக்குநர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.   

ஆம்பூர் ஸ்டார் பிரியாணி குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் முனீர் அஹமது,  நிர்வாகி வெங்கட் மற்றும் அவரது மனைவி அருணா,ஆனந்த்,  உள்ளிட்டோர் அனைவரையும் வரவேற்றனர்.

500க்கு மேற்பட்டோருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது. கில்லி எப் எம் நிவி தலைமையில் கில்லி எப் எம் நிர்வாகத்தினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.

Tags :
× RELATED கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா