×

புதுச்சேரி கடற்கரை பகுதியில் கடலில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்

 

புதுச்சேரி, அக். 26: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் நாகராஜ் (61). இவர் புதுச்சேரி பழைய துறைமுக பாலம் அருகே ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நாகராஜ் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, கடலில் ஏதோ மிதப்பது போன்று தெரிந்துள்ளது. உடனே நாகராஜ் கடற்கரை அருகே சென்று பார்த்தபோது 45 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதந்துள்ளது.

இதையடுத்து நாகராஜ் இச்சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து நாகராஜ் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார்?, கடலில் குளிக்க சென்று அலையில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரி கடற்கரை பகுதியில் கடலில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Nagaraj ,Solai Nagar, Puducherry, Muthialpet ,Old Port Bridge ,
× RELATED புதுச்சேரியில் வழக்கமான கொண்டாட்டம் கிடையாது!