கடலூர், டிச. 30: கடலூர் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவால், வியாபாரிகள் கூட்டமும் குறைந்து காணப்பட்டது. கடலூரில் இருந்து தினந்தோறும் அக்கரைகோரி, தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து ஏராளமான விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனால் கடலூர் மீன் விற்பனை தளத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் மீன்களை வாங்கி செல்வர்.
இதனால் அதிகாலை முதலே கடலூர் துறைமுகம் மீன் விற்பனை தளத்தில் மீன் விற்பனை தொடங்கிவிடும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று குறைவான படகுகளே கரைக்கு திரும்பியதால் மீன்களின் வரத்து குறைவாக இருந்தது. வியாபாரிகள் கூட்டமும் குறைந்த அளவே காணப்பட்டது. இதன் காரணமாக ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.700க்கும், சங்கரா மீன் ரூ.400க்கும், கடல் ஓரா மீன் ரூ.550க்கும், கொடுவா மீன் ரூ.500க்கும், இறால் வகைகள் ரூ.300க்கும், கனவா மீன் ரூ.250க்கும், பன்னி சாத்தான் மீன் ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
The post துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவு appeared first on Dinakaran.