துபாயில் தமிழக எப்.எம் தொகுப்பாளர்களின் கின்னஸ் உலக சாதனையின் வருட நிறைவு விழா

கடல் கடந்து வந்து  உழைக்கும் அமீரக மக்களுக்காக, 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளையும், பாடல்களையும்  ஒலிக்க செய்யும் அமீரகத்தின் பிரபல தமிழ் வானொலியான உம் அல் குவைன் பிராட்கேஸ்டிங் நெட்வொர்க்கின்(Umm al Quwainn Broadcasting Network, UBN)  ரேடியோ கில்லி 106.5 பண்பலை  3 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. உலக வானொலி வரலாற்றில், புதுமை படைக்கும் வண்ணம்,ரேடியோ கில்லி தமது  2 ஆவது வருட துவக்கத்தை, 106 மணி நேரங்கள் மற்றும் 50 நிமிடங்கள் தொடர்ச்சியாக நேரலை  நிகழ்ச்சிகளை ஆர்ஜே நிவி மற்றும் ஆர்ஜே பிரதீப் இணைந்து  தொகுத்து வழங்கி  கின்னஸ் உலக  சாதனை படைத்ததன் ஒரு வருட நிறைவு விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது,

இதுவரை இந்த கின்னஸ் உலக சாதனை யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாகவே இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது மட்டுமின்றி ரேடியோகில்லி  பல‌ தமிழர் ஒன்று கூடல்களையும், நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. கில்லி பண்பலையின் நிகழ்ச்சி மேலாளர் ஆர்ஜே நிவி மற்றும் தொகுப்பாளர்கள் ஆர்ஜே உத்ரா, ஆர்ஜே அருண், ஆர்ஜே பிரதீப், ஆர்ஜே க்ரிஷ், ஆர்ஜே அஞ்சனா, ஆர்ஜே ஹாசினி,ஆர்ஜே தாரணி, தொழில்நுட்ப மேலாளர் கோபால் மற்றும் செய்தி தயாரிப்பாளர் திலீபன் ஆகியோர் நேயர்களோடு இணைந்து இந்த மூன்றாம் ஆண்டு கொண்டாட்டங்களுடன் தொடங்கியுள்ளனர்.

Tags : Guinness World Records Anniversary Celebration ,Dubai ,Tamil Fm Packers ,
× RELATED துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி...