முதல்வரின் எக்ஸ் தள பதிவில்:
நாட்டின் எல்லையை இராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர். தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீரவணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்தியா – சீனா போரின் போது, கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி திடீரென சீனா நடத்திய தாக்குதலில் 10 ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து காவலர்களின் உயிர் தீயாகத்தை போற்றும் வகையில், அக்டோபர் 21ம் தேதி நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர்.
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவலர் நினைவு சின்னத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நாடு முழுவதும் பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
The post நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளை பாதுகாப்பவர்கள் காவல் துறையினர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.