அனைத்து மாநிலங்களிலும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம் வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ‘டி’ பிரிவு ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: அனைத்து மாநில அரசின் 4ம் பிரிவு ஊழியர்கள் சம்மேளன நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. அகில இந்திய 4ம் பிரிவு தலைவர் கே.கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில நான்காம் பிரிவு தலைவர் எஸ்.மதுரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஒரே நாடு, ஒரே இந்தியா என்று பிரதமர் கூறுவதற்கு ஏற்ப, அனைத்து மாநிலங்களிலும் ஒரே சம்பளம், ஒரே டிஏ, என அனைத்தும் ஒரே அளவில் வழங்க வேண்டும். அதற்கான சட்டம் கொண்டு வந்து, அதற்கேற்ற நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள ‘டி’ குரூப் பணியாளர்களின் இடங்களை தனியாரிடம் ஒப்படைக்காமல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். தமிழகத்தில் பணியாற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், மருத்துவமனை பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும். நான்காம் பிரிவு ஊழியர்கள் சம்மேளனத்தின் 66வது அகில இந்திய மாநாடு டெல்லி ஜந்தர்மந்தரில் ஜனவரி முதல் வாரம் நடைபெறும்.

The post அனைத்து மாநிலங்களிலும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம் வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ‘டி’ பிரிவு ஊழியர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: