நீடாமங்கலம் அரசு பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

நீடாமங்கலம், அக். 18: நீடாமங்கலம் அருகில் பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் மற்றும் பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி தலைமையாசிரியர் இளஞ்செழியன் தலைமை வகித்து பேசுகையில்.

மழைக்காலம் தொடங்கும் முன்பாக வீடுகளில் முறையாக மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கவேண்டும். ஏற்கனவே அமைத்த தொட்டிகளை சரியாக பராமரித்து மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயரச்செய்ய வேண்டும். மாணவர்கள் நெகிழிப் பையை தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் நெகிழிப்பைகள் வடிகால்களில் அடைத்துக் கொண்டு நீர் தேங்கி அதனால் நோய்களைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் எனவே மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரித்து அவற்றை உரிய குப்பைத் தொட்டியில் போடவேண்டும்.

மழைக்காலங்களில் மரக்கன்றுகள் அதிக அளவில் வளர்த்து சுற்றுச்சூழலை காக்கவேண்டும் என்றார். பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. முன்னதாக தமிழாசிரியர் தொல்காப்பியன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் உடற்கல்வி ஆசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி உரையாற்றினார்.

The post நீடாமங்கலம் அரசு பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: