கொங்கராயக்குறிச்சி அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்துங்கநல்லூர், அக். 18: கொங்கராயக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தகவலறியும் உரிமை சட்டம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கோட்ட கலால் தாசில்தார் தங்கையா, கொங்கராயக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி பாண்டி பெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது. மாணவர்களாகிய நீங்கள் நன்கு படித்தால், எதிர்காலத்தில் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். நல்ல ஒரு அரசு துறைகளில் பணி புரிய முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம், அதனை பயன்படுத்தும் முறை, இச்சட்டத்தின் கீழ் வரும் அரசு துறைகள், வராத துறைகள், எவ்வாறு பொது தகவல்களை பெற வேண்டும், எத்தனை நாட்களுக்குள் தகவல்களை பெற முடியும் என்பது குறித்தும் மாணவ- மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சியம்மாள், கிராம உதவியாளர்கள் கொங்கராயக்குறிச்சி ஆனந்த பத்மநாபன், ஆறாம்பண்ணை சரத்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.

The post கொங்கராயக்குறிச்சி அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: