கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்

சிவகங்கை, அக். 18: கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியை அதிகரித்திட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்க, கிராமப்புற மக்களுக்கு மீன் புரதச்சத்து எளிதில் கிடைத்திடவும் வழிவகை செய்திடுவதற்கு ஏதுவாக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்திற்கு 90எக்டேர் பரப்பளவில் பஞ்சாயத்து குளங்கள் தேர்வு செய்யப்பட்டு, 1 எக்டேருக்கு 2 ஆயிரம் வீதம் மொத்தம் 90 எக்டேருக்கு 1.80 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

The post கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: