அதிமுக தற்போது சரியாக இல்லை: வி.கே.சசிகலா விமர்சனம்

சென்னை: அதிமுக தற்போது சரியாக இல்லை என வி.கே.சசிகலா விமர்சனம் செய்தார். அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை கொண்டாடிய பிறகு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இனி நீக்கப்பட்டவர்கள்தான். ஓ.பி.எஸ்., சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அதுபற்றி இனி எந்த செய்தியும் போடாதீர்கள் என்று கோபமாக கூறினார்.

இந்நிலையில் கட்சி சரியாக இல்லை என சசிகலா விமர்சனம் செய்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதிமுக தற்போது சரியாக இல்லை. அதிமுகவில் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டியுள்ளன. கட்சியை வலுப்படுத்த நிறைய செய்ய வேண்டியிருருக்கிறது. கட்சியை வலுப்படுத்தி 2026-ல் மக்களாட்சி அமைக்கப் போகிறோம் என்றும் கூறினார்.

The post அதிமுக தற்போது சரியாக இல்லை: வி.கே.சசிகலா விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: