தண்ணீரை காய்ச்சி குடிங்க

ராமநாதபுரம், அக். 17: மழைக்காலத்தில் காய்ச்சலை தடுக்க தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. பருவநிலை மாறுபாட்டின் காரணமாக மாவட்டத்தில் ஏராளமானோருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, ‘‘பருவநிலை மாறுபாட்டின் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இவர்களில் காய்ச்சலுக்காக வருபவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட 20% அதிகரித்துள்ளது. காய்ச்சலை தடுக்க சுடு தண்ணீரை பருக வேண்டும். ஆறிய மற்றும் பழைய உணவு வகைகளை உட்கொள்ளக்கூடாது. சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் வீடுகளில் சேரும் தூசு, குப்பை போன்றவற்றை அப்புறப்படுத்துவது அவசியம். காற்று காலங்களைப்போல் மழை காலத்திலும் சருமம் உலர்ந்து காணப்படும். அவரவரின் தோலின் தன்மைக்கேற்ப தேங்காய் எண்ணை அல்லது லோஷன் போன்றவற்றை தடவிக்கொள்ளலாம். மழை காலங்களில் வெளியில் செல்லும்போது அவசியம் காலணி அணிய வேண்டும்’’ இவ்வாறு கூறினர்.

The post தண்ணீரை காய்ச்சி குடிங்க appeared first on Dinakaran.

Related Stories: